ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி

ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி.


" alt="" aria-hidden="true" />



ஆம்பூர் வனச்சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் நடந்தன.இதில் ஆம்பூர் வனத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு அடர்ந்த காடுகளுக்குள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு முற்றிலும் தீ வைப்பு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அதேசமயம் தீ வைப்பு சம்பவங்கள் ஈடுபட்டவர்களையும் கைது செய்து ஆஜர்படுத்தினர்.



இதற்கு சமூக ஆர்வலரும் வனவிலங்குகள் ஆர்வலருமான சின்னவரிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடந்தது .முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமி சந்திரன் ,அரவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் வனசரகர் ஜி.டி. மூர்த்தி வனக்காப்பாளர்கள் நல்லதம்பி ,காந்தகுமார் மகேஷ், ரமேஷ்குமார், ராஜ்குமார் ,பால்ராஜ் வனக்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, முகம்மது சுல்தான், ஞானவேல், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.ஆம்பூர் வனசரகர் மூர்த்தி கூறுகையில் " கோடை காலம் முடியும் வரையில் தீத்தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது எனவும், ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் மான்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.